விருதுநகர்

பேச்சியம்மன் கோவில் பொங்கல் விழா

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அருகேயுள்ள கீழதுலுக்கன்குளம் அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அன்னதானம் நடைபெற்றது.

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அருகேயுள்ள கீழதுலுக்கன்குளம் அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அன்னதானம் நடைபெற்றது.

கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் பொங்கல்விழா துவங்கியது.

தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கோவில் நிர்வாகத்தினர் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் வில்லிபத்திரி முன்னாள் ஊராட்சித் தலைவர் வி.டி.பாலகிருஷ்ணன், மதுரை மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் குருசாமி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா மேலாளர் முருகேசன், அதிமுக பிரதிநிதி ஜெயமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொங்கல்விழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. அலங்காரம் செய்யப்பட்ட அம்மன் சிலை கிராமத்தின் நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்தது. பொங்கல் விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT