விருதுநகர்

பிளஸ்2 தேர்வு முடிவு வினாத்தாள் பாதுகாப்பு மையத்தின் மூலம் மதிப்பெண் பட்டியல்களை தலைமையாசிரியர்கள் பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடு  

தமிழகம் முழுவதும் வருகிற 9-ம் தேதி இணைய தளத்தில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு பள்ளிக் கல்வித்துறை மூலம் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்2 தேர்வு அட்டவணை

எஸ். பாண்டியன்

வினாத்தாள் பாதுகாப்பு மையங்களின் மேற்பார்வையாளர்கள் மூலம்  பிளஸ்2 தேர்வு அட்டவணை மதிப்பெண்கள் பட்டியலை, ஒவ்வொரு பள்ளி தலைமையாசிரியர்களும் பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வருகிற 9-ம் தேதி இணைய தளத்தில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு பள்ளிக் கல்வித்துறை மூலம் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்2 தேர்வு அட்டவணை மதிப்பெண் பட்டியலை பெறுவதறகு அனைத்துப் பள்ளி தலைமையாசிரிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வரவேண்டும்.அதன் பின்னர் குறிப்பிட்ட மையத்தில் வைத்து மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். அதையடுத்து, பள்ளிகளில் உள்ள தகவல் பலகையில் வெளியிடப்பட்டு வந்தது. ஆனால், நிகழாண்டில் தலைமையாசிரிகளின் அலைச்சலை தடுக்கும் வகையில் அட்டைவணை பட்டியல் பெறும் பணி எளிதாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நிகழாண்டில் மாநிலம் முழுவதும் 6 முதல் 9-வது வகுப்பு வரையிலான வினாத்தாள் பாதுகாப்பு மையங்களின் மூலம் மதிப்பெண்கள் பட்டியலை தலைமையாசிரியர்கள் பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்கள்-9430 பேர்களும், மாணவிகள் 11682 பேர்களும் என மொத்தம் 21112 பேர்கள் வரையில் பிளஸ்2 தேர்வை எழுதியுள்ளனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வினாத்தாள் பாதுகாப்பு மையங்களான அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள சாத்தூர் எத்திலால் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலகத்திலும் வழங்கப்பட இருக்கிறது. அதேபோல், விருதுநகர் கல்வி மாவட்டத்தில், விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகாசி ஏ.யூ.நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் புனித இருதய மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் எஸ்.எஸ்.அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வழங்கப்பட இருக்கிறது.

தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு அட்டவனைப்படுத்தப்பட்ட மதிப்பெண்கள் பட்டியல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதை, வினாத்தாள் பாதுகாப்பு மையத்தின் மேற்பார்வையாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வந்து விட வேண்டும். அதையடுத்து, பாதுகாப்பு மையத்தின் தூரங்களை கணக்கிட்டு அதற்கேற்ப ஒவ்வொரு பள்ளிக்கும் ஆன சீலிட்ட அட்டவனை மதிப்பெண்கள் பட்டியல் அடங்கிய உறை வழங்கப்படும்.அதை, மேற்பார்வையாளர்கள் பாதுகாப்பு மையத்திற்கு விரைந்து கொண்டு சென்று தலைமையாசிரிகளிடம் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே வழங்கப்படும். பின்னர் ஒவ்வொரு பள்ளி தலைமையாசிரியர்களும் பள்ளிகளுக்குச் சென்று காலை 10 மணிக்கு தகவல் பலகையில் மாணவ, மாணவிகள் பார்வைக்கு வெளியிட வேண்டும்.   

அதோடு, ஒவ்வொரு அரசு மேல்நிலைப்பள்ளியிலும் இணையதள வசதியை ஏற்படுத்துவதற்து அந்தந்த தலைமையாசிரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரையில் செயல்படாமல் இருந்தால், பள்ளி வசதி கட்டமைப்பு நிதியிலிருந்து  உரிய கட்டணத்தை செலுத்தி செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மேலும், இது

தொடர்பாக தலைமையாசிரிகள் கூட்டத்தை நடத்தி பள்ளிகளின் முழு விவரங்களை பெற்று கணினியில் அரசு இணைய தளத்தில் பதிவு செய்ய அனுப்பி வைக்க வேண்டும் என ஒவ்வொரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வி துறை  உத்தரவிட்டுள்ளதாக அலுவலக வட்டாரங்களில் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT