முகப்பு
விருதுநகர்

பாலிடெக்னிக் கல்லூரி திறப்பு விழா

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பந்தனேந்தல் ஸ்ரீ போகர் பாலிடெக்னிக் கல்லூரியை மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் திறந்து வைத்தார்.      பந்தனேந்தலில் ஞானியார் அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள

Updated On : 27 மே, 2013 at 12:08 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:25 PM

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பந்தனேந்தல் ஸ்ரீ போகர் பாலிடெக்னிக் கல்லூரியை மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் திறந்து வைத்தார்.  

   பந்தனேந்தலில் ஞானியார் அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ போகர் பாலிடெக்னிக் கல்லூரி திறப்பு விழா, அறக்கட்டளை தலைவர் பிரபாகர் தலைமையில், சேர்மன் ரவீந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.

   மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் கல்லூரியைத் திறந்து வைத்து பேசினார். மாணவர்கள் தூய்மையான சூழ்நிலையில் கல்வி பயில சித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் 100-க்கும் மேற்பட்ட மூலிகை மரங்கள் கல்லூரி வளாகம் முழுவதும் நடப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் ஆன்மிக முன்னேற்றத்துக்காக தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கல்லூரி முழுவதும் சோலார் வசதி செய்துள்ளதாகவும், நவீன தொழில்நுட்பம் கொண்ட தொழிற்கூடம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வீடியோ கான்பரன்ஸிங் மூலம் மாணவர்களுக்கு புதிய தொழில் நுட்ப யுக்திகள் குறித்து பாடம் நடத்தப்படுமென்றும் அறக்கட்டளைத் தலைவர் பிரபாகரன் கூறினார்.

Advertisement

   நிகழ்ச்சியில் அரசு சிறப்பு பிளீடர் புகழேந்தி, கல்லூரி முதல்வர் பழனிசெல்வம், அறக்கட்டளை நிர்வாகிகள் கோட்டாட்சியர் குணசேகரன், வட்டாட்சியர் முகம்மது ரபிக்கான், அருப்புக்கோட்டை நகர சபைத் தலைவர் சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.