விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்க கூட்டம்

இந்தக் கூட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.அசோகன் தலைமை வகித்தார். இதில், ராஜபாளையம் மொத்த கூட்டுறவு பண்டகசாலையின் தலைவர் ஆர்.கண்ணன், செயலாளர் எம்.முணியான்டி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு ஊழியர்களின் சங்கத்தின் மாவட்டக் குழு கூட்டம் இன்று அதன் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.அசோகன் தலைமை வகித்தார். இதில், ராஜபாளையம் மொத்த கூட்டுறவு பண்டகசாலையின் தலைவர் ஆர்.கண்ணன், செயலாளர் எம்.முணியான்டி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் வருமாறு: உறுப்பினர் பதிவை வருகிற ஜூன் மாத்திற்குள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இச்சங்கத்தின் மாவட்ட மாநாட்டை வரும் ஆகஸ்டு மாதம் நடத்த வேண்டும். இம்மாவட்டத்தில் பண்டகசாலை ஊழியர்களுக்கான சிக்கன நாணய சங்கத்தை உடனே அமைப்பது. நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு ஞாயிறு விடுமுறை என்பது தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்ட கூட்டுறவு ஊழியர்கள் சங்கத்தினைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர். இறுதியாக பொதுச்செயலாளர் விஸ்வரூபகேசவன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT