முகப்பு
விருதுநகர்

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க காரியாபட்டி வட்டக் கிளை சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சென்னையில் மீண்டும் பணி வழங்கக்

Updated On : 12 நவம்பர், 2013 at 12:27 AM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:13 AM

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க காரியாபட்டி வட்டக் கிளை சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சென்னையில் மீண்டும் பணி வழங்கக் கோரி மறியலில் ஈடுபட்ட சாலைப் பணியாளர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டக் கிளைத் தலைவர் போஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

 ஊரக வளர்ச்சித் துறை சங்க மாவட்டச் செயலர் கதிரேசன், மாநில செயற்குழு உறுப்பினர் புகழேந்தி, ஆணையாளர் கண்ணன் உள்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க காரியாபட்டி வட்ட செயலர் சீராளன் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.