மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!
மண்டாடி படத்தின் புதிய போஸ்டர்...
மண்டாடி திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
விடுதலை, மாமன் திரைப்படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மண்டாடி. மதிமாறன் இயக்கத்தில் மீனவர்களின் வாழ்க்கைப் பின்னணியில் பெரிய பொருள் செலவில் தயாராகிறது.
தற்போது, இப்படத்தின் முக்கியமான சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இதனை கோடை வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
நீண்ட நாள்களாக படப்பிடிப்பில் இருப்பதால் பேசப்படும் காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுஹாஸ் வில்லனாக நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.
actor soori's mandati movie new poster out now
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.