FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அசத்தும் நடிகர் சூரியின் மண்டாடி முன்வெளியீட்டு வணிகம்!

நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படத்தின் முன்வெளியீட்டு வணிகம் குறித்து...

Updated On : 26 ஜூலை 2026, 3:13 pm IST
நடிகர் சூரி
பகிர்:

நடிகர் சூரி நடிப்பில் உருவான மண்டாடி திரைப்படம் முன்வெளியீட்டு வணிகத்தில் கவனம் பெற்றுள்ளது.

நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் “மண்டாடி”. இப்படத்தை, இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். நாகை பகுதி மீனவர்களின் வாழ்வியலையும் அங்கு நடைபெறும் படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.

அண்மையில், ‘மண்டாடி மண்டாடி’ என்கிற பாடலை வெளியிட்டிருந்தனர். இதில் நடிகர் சூரி மிகச்சிறப்பாக நடனமாடியுள்ளதால் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தற்போது இப்படத்தின் கர்நாடக வெளியீட்டு உரிமையை மீடியா கன்சல்டன்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உள்பட தென்னிந்திய மொழிகளில் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சூரி நடிப்பில் இறுதியாக வெளியான கருடன், மாமன் ஆகிய படங்கள் வணிக வெற்றியைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

The film Mandaadi, starring actor Soori, has garnered attention in pre-release business.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments