வரவேற்பைப் பெற்ற மண்டாடி டிரைலர்! சர்தார் 2-க்கு போட்டியாக அமையுமா?
சூரியின் மண்டாடி டிரைலருக்கு நல்ல வரவேற்பு...
நடிகர் சூரி நடிப்பில் உருவான மண்டாடி திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
விடுதலை, கருடன், மாமன் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் மண்டாடி. இப்படத்தை, இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். நாகை மீனவர்களின் வாழ்வியலில் ஒன்றாக படகுப்போட்டியை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
இளம் வயதில் சிறந்த படகுப்போட்டி வீரரான நாயகன் ஒரு பிரச்னையால் படகுப்போட்டியிலிருந்து விலகுகிறார். நீண்ட காலம் கழித்து மீண்டும் அதற்கு எப்படி திரும்புகிறார் என்கிற கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் காட்சிகள் பெரிதாக வரவேற்பைப் பெற்றதால் பலரும் செப். 10 ஆம் தேதி முதல் நாள் முதல் காட்சியாக மண்டாடியைப் பார்க்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அதே நாளில் நடிகர் கார்த்தியின் சர்தார் - 2 திரைப்படமும் திரைக்கு வருகிறது. இரண்டு படங்களுக்குமே ஆரோக்கியமான எதிர்பார்ப்பு நிலவுதால் கூடுதல் திரைகளை இரண்டு படங்களும் ஆக்கிரமிக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் கார்த்தி - சூரி ஆகியோரின் இருவரும் முதல்முறையாக ஒரே நாளில் திரைக்கு வரவுள்ளனர். இரண்டில் எந்தப் படம் ரசிகர்களைக் கவரும் என்கிற எதிர்பார்ப்பும் இயல்பாக எழுந்துள்ளது.
The trailer for the movie Mandaadi, starring actor Soori, is garnering praise from fans.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.