ரூ. 50 கோடியை நெருங்கும் மண்டாடி!
சூரியின் மண்டாடி வசூல் குறித்து...
நடிகர் சூரி நடிப்பில் உருவான மண்டாடி திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூரியின் மண்டாடி மற்றும் நடிகர் கார்த்தியின் சர்தார் - 2 திரைப்படங்கள் செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில், சர்தார் - 2 கலவையான விமர்சனங்களையும் மண்டாடி நல்ல விமர்சனங்களையும் பெற்றன. இதனால், மண்டாடி திரைப்படத்திற்குத் திரைகள் அதிகரித்தது.
மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சேர்த்து மண்டாடி திரைப்படம் முதல் நாள் வசூலாக ரூ. 4.70 கோடியையும் சர்தார் - 2 ரூ. 4.50 கோடியையும் வசூலித்துள்ளதாகக் கூறப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மண்டாடி திரைப்படம் இதுவரை ரூ. 50 கோடி வசூலை நெருக்கியிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சூரி நடித்த திரைப்படங்களிலேயே இப்படம் அதிகமான வசூலைக் குவிக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
Information regarding the box office collection of the movie Mandaadi, starring actor Soori, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.