மண்டாடியின் வெற்றி மீனவர்களுக்கானது: சூரி
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது...
நடிகர் சூரி நடிப்பில் உருவான மண்டாடி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
நடிகர்கள் சூரி, சுஹாஸ், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான மண்டாடி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ராமநாதபுரத்தின் பாரம்பரிய கடல் விளையாட்டான பாய்மரப்படகுப் போட்டியை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
சில கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் உருவாக்க ரீதியாக இப்படம் கவர்ந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இதனால், மண்டாடி வெற்றிப்படமாகலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், படத்தின் வெளியீட்டை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்த நடிகர் சூரி, “மண்டாடி திரைப்படத்திற்காக பல மாதங்கள் கடலில் இருந்து நடித்தோம். கண்டிப்பாக வெற்றி பெறும் என்கிற நம்பிக்கையில் மிகவும் கஷ்டப்பட்டோம். அதற்கெல்லாம் இன்று பலன் கிடைத்துவிட்டது. திரையரங்கில் ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடுவதைப் பார்த்தேன். ஒரு மீனவனாக நடித்ததை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். மண்டாடி படக்குழுவின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. இப்படத்தின் வெற்றி மீனவர்களுக்கானது” எனத் தெரிவித்துள்ளார்.
The movie Mandaadi, starring actor Soori, has been released in theaters today.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.