நடிகர் சூரியின் மண்டாடி வசூல் இவ்வளவா?
மண்டாடி வசூல் குறித்து...
நடிகர் சூரி நாயகனாக நடித்து வெளியான “மண்டாடி” திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூரியின் மண்டாடி மற்றும் நடிகர் கார்த்தியின் சர்தார் - 2 திரைப்படங்கள் செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில், சர்தார் - 2 கலவையான விமர்சனங்களையும் மண்டாடி நல்ல விமர்சனங்களையும் பெற்றன. இதனால், மண்டாடி திரைப்படத்திற்குத் திரைகள் அதிகரித்தது.
மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சேர்த்து மண்டாடி திரைப்படம் முதல் நாள் வசூலாக ரூ. 4.70 கோடியையும் சர்தார் - 2 ரூ. 4.50 கோடியையும் வசூலித்துள்ளதாகக் கூறப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மண்டாடி திரைப்படம் 3 நாள்களில் ரூ. 30 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சூரி நடித்த திரைப்படங்களிலேயே இப்படம் அதிகமான வசூலைக் குவிக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களின் வாழ்வியலையும், அவர்களின் படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் நடிகர்கள் சத்யராஜ், மஹிமா நம்பியார், மிதுன் ஜெய்சங்கர், சுஹாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Details regarding the box office collection of the film "Mandaadi," starring actor Soori in the lead role, have been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.