முகப்பு
விருதுநகர்

ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட திட்ட அலுவலர் மாடசாமி

Updated On : 30 நவம்பர், 2013 at 12:19 AM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:31 AM

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட திட்ட அலுவலர் மாடசாமி வழிகாட்டுதலின்படி நடந்தது.    தொடக்க, உயர் தொடக்க ஆசியர்களுக்கு, தமிழ், ஆங்கிலம், மொழிப்பாடங்களில் படித்தல், எழுதுதல், கணித பாடத்தின் அடிப்படை செயல்பாடுகள் குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டது. வளமைய மேற்பார்வையாளர் காந்திமதி தொடங்கி வைத்தார். ராஜேஷ்பாபு, ராஜாராம், கந்தசாமி, முத்தையா, வினோதா, காளீஸ்வரி கருத்தாளர்களாக கலந்து கொண்டனர். 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர்.

வாழ்வியல் திறன் பயிற்சி: காரியாபட்டியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் நடந்தது.

   வட்டார பெண் கல்வி ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் கருத்தாளராக செயல்பட்டார். வட்டார பள்ளி செல்லா குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் பால்மணி, முத்தையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.