முகப்பு
விருதுநகர்

வாக்காளர் சேர்ப்பு விழிப்புணர்வு முகாம்

காரியாபட்டியில் இந்திய அரசு இளைஞர்நலன், விளையாட்டு அமைச்சகம், நேரு யுவகேந்திரா சார்பில் வாக்காளர்களை சேர்ப்பதற்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Updated On : 13 அக்டோபர், 2013 at 12:19 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 11:44 PM

காரியாபட்டியில் இந்திய அரசு இளைஞர்நலன், விளையாட்டு அமைச்சகம், நேரு யுவகேந்திரா சார்பில் வாக்காளர்களை சேர்ப்பதற்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

   நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ராபர்ட்ஜேம்ஸ், தேசிய இளையோர் படை உறுப்பினர் கரந்தமலை தலைமையில் வட்டாட்சியர் முகம்மதுரபிக்கான், ரோட்டரி சங்கத் தலைவர் இன்பமணி முன்னிலையில் முகாம் நடைபெற்றது. வாக்காளர் பதிவு அலுவலர் கோட்டாட்சியர் உதயக்குமார் 18 வயது நிரம்பியர்வகளை புதிய வாக்காளர்களாக சேர்ப்பது குறித்தும் அக்டோபர் 1 முதல் 31 வரை வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெறும் காலத்தில் வாக்காளர் பெயர் சேர்ப்பது, நீக்கம் செய்வது, முகவரி திருத்தம், வாக்களிப்பதன் அவசியம், புதிய வாக்காளர் படிவம் 6-ல் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

  சிறந்த தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் கூறிய இளைஞர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. துணை வட்டாட்சியர் அறிவழகன், வருவாய் அலுவலர் தேவாமிர்தம், கிராம நிர்வாக அலுவலர் இருளாண்டி உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.