முகப்பு
விருதுநகர்

அதிமுக பொதுக்கூட்டம்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகேயுள்ள கல்குறிச்சியில் காரியாபட்டி ஒன்றிய அதிமுக சார்பில் அதிமுக 42-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 அக்டோபர், 2013 at 12:13 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 11:49 PM

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகேயுள்ள கல்குறிச்சியில் காரியாபட்டி ஒன்றிய அதிமுக சார்பில் அதிமுக 42-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

     கூட்டத்திற்கு கிளைச் செயலர் பாண்டிமுருகன், ஊராட்சி மன்றச் செயலர் சங்கர சபாபதி, கூட்டுறவு சங்கத் தலைவர் முருகன், விருதுநகர் மாவட்ட இலக்கிய அணிச் செயலர் முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். கிளைக் கழக செயலர்கள் கணக்குவேட்டையன், சேதுராமன், ரஞ்சித்குமார், பெரியகருப்பன், சந்திரசேகர், நகரச் செயலர்கள் விஜயன், சொக்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரியாபட்டி ஒன்றியக்குழு துணைத் தலைவர் ராமமூர்த்தி, தலைமைக் கழக பேச்சாளர் தர்மராஜன், விவசாயப் பிரிவு செயலர் முத்துப்பாண்டி, மாவட்டக் கவுன்சிலர் விமலா ராஜேந்திரன் உள்பட பலர் பேசினர்.

    ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கார்த்திகா கண்ணன், ஈஸ்வரி கிருஷ்ணன், இந்திரா கிருஷ்ணன், கூட்டுறவு வங்கித் தலைவர் பால்ச்சாமி நாயக்கர், கிளைச் செயலர்கள் பாண்டிமுத்து, முருகன், ஊராட்சி மன்றத் தலைவர் மார்நாடு, கருப்புராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை காரியாபட்டி ஒன்றிய அதிமுக செயலாளர் கரியனேந்தல் ராமமூர்த்தி செய்திருந்தார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.