FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

எல்ஐகே வசூல் எவ்வளவு?

பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐகே வசூல் குறித்து...

Updated On : 13 ஏப்ரல் 2026, 5:00 pm IST
பிரதீப் ரங்கநாதன்
பகிர்:

எல்ஐகே திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் எல்ஐகே. முற்றிலும் ஏஐ, ரோபோ தொழில்நுட்ப விஷயங்களைக் கொண்டு கதையாக உருவான இப்படம் ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

புதுமையான விஷயங்களைக் கதைக்குள் பொருத்தினாலும் கதையாகவும் திரைக்கதையாகவும் சோர்வைத் தரும் காட்சிகள் இருந்ததாலும் எங்கும் உணர்வுப்பூர்வமாக மாறாததாலும் இப்படம் எதிர்பார்த்த திருப்தியைக் கொடுக்கவில்லை என பிரதீப் ரசிகர்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், எல்ஐகே முதல் 3 நாள்களில் உலகளவில் ரூ. 28 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், படம் பெரிய வரவேற்பைப் பெறாததால் வசூலில் பிரதீப்பின் முந்தைய படங்களை நெருங்காது என்றே கணிக்கப்பட்டுள்ளது.

summary

reports suggests that pradeep ranganathan's lik movie collected nearly 28 crores

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments