முகப்பு
விருதுநகர்

அரசு பெண்கள் பள்ளியில் ஆசிரியைகள் பற்றாக்குறை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியைகள் பற்றாக்குறையால், மாணவிகள் சிரமப்படுகின்றனர்.   காரியாபட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1100-க்கும்

Updated On : 26 அக்டோபர், 2013 at 12:34 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 11:56 PM

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியைகள் பற்றாக்குறையால், மாணவிகள் சிரமப்படுகின்றனர்.   காரியாபட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1100-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பிளஸ்-2-ல் மட்டும் 550 பேர் படித்து வருகின்றனர். முதுகலை தமிழ், ஆங்கிலம் பாடங்களுக்கு, 3 ஆசிரியைகள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு ஆசிரியை பாடம் நடத்தி வருகிறார்.

    முதுகலை விலங்கியியல், வேதியியல், வணிகவியல், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த பாடப்பிரவுகளுக்கு, இருக்கிற ஆசிரியைகளை கொண்டு பாடம் நடத்தி வருகின்றனர். ஆசிரியைகளுக்கு பணிச்சுமை அதிகரிப்பதால், முறையாக பாடம் நடத்த முடிய வில்லை.     பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி கூறியதாவது: காலிப் பணியிடங்களை நிரப்ப, பலமுறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை நிரப்பப்படவில்லை. ஆசிரியைகள் பற்றாக்குறையால், மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். உடனடியாக ஆசிரியைகளை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.