அதீத பேட்டரி திறன்... இன்ஃபினிக்ஸ் நோட் 60 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்!
இன்ஃபினிக்ஸ் நோட் 60 வரிசையில் முதல் ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது குறித்து...
இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் நோட் 60 ப்ரோ, இந்திய சந்தையில் இன்று (ஏப். 13) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோட் 60 வரிசையில் அறிமுகமாகியுள்ள முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.
கேமராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, 7 ஆம் தலைமுறை புராசஸருடன் தினசரி அதீத பயன்பாட்டிற்காக இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது.
8GB உள்நினைவகம் (RAM) மற்றும் 128GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 31,999.
Advertisement
இதற்கு அடுத்தபடியாக 8GB உள்நினைவகம் மற்றும் 256GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 34,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சந்தைக்கு இன்று அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் ஏப்ரல் 20 ஆம் தேதி முதலே விற்பனை தொடங்கவுள்ளது. இணைய விற்பனை தளமான ஃபிளிப்கார்ட்டில் வங்கிக் கடன் அட்டைகளுக்கு ரூ. 3000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஃபினிக்ஸ் நோட் 60 ப்ரோ சிறப்புகள்:
இன்ஃபினிக்ஸ் நோட் 60 ப்ரோ 6.78 அங்குல அமோலிட் திரை உடையது.
திரை சுமூகமாக இயங்கும் வகையில் 144Hz திறன் கொண்டது.
திரைக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கும் வகையில் கொரில்லா கிளாஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்நாப்டிராகன் 7 ஆம் தலைமுறை புராசஸர் உடையது.
கேமரா பிரியர்களுக்காக 50MP முதன்மை கேமராவும் 8MP அல்ட்ரா வைட் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபி பிரியர்களுக்காக முன்பக்கம் 13MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
6500mAh பேட்டரி திறன் கொண்டது. வையர் இல்லாமலே சார்ஜ் செய்துகொள்ளும் அம்சம் உடையது.