கணவர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு
கூடுதல் வரதட்சிணை கேட்டு சித்ரவதை செய்ததாக, பெண் கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவர் உள்பட 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கூடுதல் வரதட்சிணை கேட்டு சித்ரவதை செய்ததாக, பெண் கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவர் உள்பட 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சியைச் சேர்ந்தவர் குமரேசன். பேக்கரி கடை வைத்துள்ளார். இவரது மனைவி பிரேமா (23). இவர் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: எனக்கும், குமரேசனுக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. அப்போது 14 பவுன் நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம் வரதட்சிணையாக வழங்கப்பட்டது. இப்போது கூடுதலாக நகை, ரொக்கம் கேட்கிறார்கள். எனவே எனது கணவர் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக போலீஸார், குமரேசன் உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.