யோகாசனப் போட்டி பரிசளிப்பு
அருப்புக்கோட்டை மீரா மருத்துவமனை யோகா மையம் சார்பில் யோகாசன போட்டிகள் மற்றும் சர்வதேச யோகாசனப் போட்டியில் கலந்து கொண்டோருக்கு பரிசளிப்பு விழா மெக்கா தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை மீரா மருத்துவமனை யோகா மையம் சார்பில் யோகாசன போட்டிகள் மற்றும் சர்வதேச யோகாசனப் போட்டியில் கலந்து கொண்டோருக்கு பரிசளிப்பு விழா மெக்கா தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
வாழவந்தாபுரம் முஸ்லிம் ஜமாத் தலைவர் ஜின்னா தலைமை தாங்கினார். மீரா யோகாசன மைய ஆசிரியர் சுந்தர்ராஜன் வரவேற்றார்.
டாக்டர் மன்சூர் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், ஜமாத் செயலாளர் ஜபருல்லா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
Advertisement
யோகாசன போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வழக்குரைஞர் விஜயரெங்கன் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். முன்னதாக மெக்கா தொடக்கப்பள்ளி தலைவர் முகமது ஹனிபா தலைமையில் செயலர் சாகுல் அமீது முன்னிலையில் கவுன்சிலர் சிக்கந்தர் போட்டியை தொடங்கி வைத்தார்.
கனரா வங்கி மேலாளர் மாணிக்கவேல் நன்றி கூறினார்.