விருதுநகர்

சிறந்த அரசுப் பணியாளருக்கு விருது

விருதுநகர் மாவட்டத்தில் சிறந்த அரசுப் பணியாளராக தேர்வு செய்யப்பட்ட சேத்தூர் பேரூராட்சி இளநிலை உதவியாளர் காமராஜுக்கு செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி விருது வழங்கினார். பேரூராட்சி பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவராக பதவி

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டத்தில் சிறந்த அரசுப் பணியாளராக தேர்வு செய்யப்பட்ட சேத்தூர் பேரூராட்சி இளநிலை உதவியாளர் காமராஜுக்கு செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி விருது வழங்கினார். பேரூராட்சி பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவராக பதவி வகித்த அ.காமராஜ் விருதுநகர் மாவட்ட அரசுப் பணியாளர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்காக சிறந்த அரசுப் பணியாளர் விருது அ.காமராஜுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT