சூரிய சக்தி மின்சாதனங்களை பராமரிப்பது குறித்து பயிற்சி
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் முதல்வரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தில் உள்ள பயனாளிகள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், செயலாளர்களுக்கு
விருதுநகர்சூரிய சக்தி மின்சாதனங்களை பராமரிப்பது குறித்து பயிற்சி
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் முதல்வரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தில் உள்ள பயனாளிகள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், செயலாளர்களுக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் முதல்வரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தில் உள்ள பயனாளிகள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், செயலாளர்களுக்கு சூரிய சக்தி மின்சாதனங்களை பராமரிப்பது குறித்த ஒரு நாள் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.பயிற்சியைத் தொடங்கி வைத்து ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் சிறப்பான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார். அவரது திட்டங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் உடனடியாக பயனாளிகளைச் சென்றடையும் வகையில் அலுவலர்களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் செயல்பட்டு வருகிறார்கள். தற்போது ஒன்றியத்தில் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் சூரிய சக்தி மின்சானம் பொருத்துதல், செயல்முறை, பயன்பாடு மற்றும் பராமரித்தல் குறித்த உணர்வூட்டும் பயிற்சி பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. பயனாளிகள் இதனை முழுமையாகப் பயன்படுத்தி மின்சாதனங்களை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்றார் அவர்.
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் உதவிப் பொறியாளர் எம்.சித்ராதேவி, பயனாளிகள், 29 ஊராட்சிகளைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் அதன் செயலாளர்களுக்கு இது குறித்து பயிற்சி அளித்தார்.