மல்லாங்கிணறில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் திமுக தேர்தல் அலுவலக திறப்பு விழா பேரூராட்சித் தலைவர் நாகையா தலைமையில் நகரச் செயலர் மா. முருகேசன் முன்னிலையில் நடைபெற்றது. திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் திமுக தேர்தல் அலுவலக திறப்பு விழா பேரூராட்சித் தலைவர் நாகையா தலைமையில் நகரச் செயலர் மா. முருகேசன் முன்னிலையில் நடைபெற்றது. திருச்சுழி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது: அதிமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுக்க தயாராகி விட்டனர். திமுக தொண்டர்கள் அதை தடுத்து ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த அதிகாரிகளுக்கு உதவியாக இருக்க வேண்டும். திமுக ஆட்சியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வந்தோம். ஆனால், அந்தத் திட்டத்தை பற்றி அமைச்சர்கள் ஒரு ஆய்வு நடத்தி இருப்பார்களா? அதைப் பற்றி கவலைப் பட மாட்டார்கள்.
மக்களை பற்றி கவலைப் படுவது தலைவர் கலைஞரின் அரசு தான். எனவே, தொண்டர்கள் கிராமம் கிராமமாக பிரசாரம் செய்ய வேண்டும். முகமது ஜலீலுக்கு 30 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுத் தருவோம்.
அதிமுகவினர் மக்களை நம்பி தேர்தலில் போட்டியிடவில்லை, பண பலத்தை நம்பியே போட்டியிடுகின்றனர் என்றார். மல்லாங்கிணறு முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் போஸ், பொதுக் குழு உறுப்பினர் தேவர், முன்னாள் நகரச் செயலர் தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Advertisement