விருதுநகர்

சென்னகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு செங்கமலநாச்சியார் சமேத சென்னகேசவ பெருமாள் கோயில் பங்குனி தேரோட்ட திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது.     சென்னகேசவ பெருமாள் கோயில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 10 நாள்களுக்கு முன்பு

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு செங்கமலநாச்சியார் சமேத சென்னகேசவ பெருமாள் கோயில் பங்குனி தேரோட்ட திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

    சென்னகேசவ பெருமாள் கோயில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 10 நாள்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது.

      முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் நாகையா வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். மல்லாங்கிணறின் 4 ரதவீதிகள் வழியாக தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. இந்த திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர். கோயில் தேரோட்ட திருவிழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT