முகப்பு
விருதுநகர்

காரியாபட்டியில் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

காரியாபட்டி ஒன்றியப் பகுதிகளில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அன்வர்ராஜாவை ஆதரித்து அக்கட்சியினர் வீடுவீடாக  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.  ஒன்றிய அதிமுக செயலர் ராமமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணிச் செயலர் முருகன், விவசாயப்

Updated On : 22 ஏப்ரல், 2014 at 12:14 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:33 AM

காரியாபட்டி ஒன்றியப் பகுதிகளில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அன்வர்ராஜாவை ஆதரித்து அக்கட்சியினர் வீடுவீடாக  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

 ஒன்றிய அதிமுக செயலர் ராமமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணிச் செயலர் முருகன், விவசாயப் பிரிவுச் செயலர் முத்துபாண்டி தலைமையில் ஏராளமான அதிமுகவினர் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுவீடாக சென்று அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து அன்வர்ராஜாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். சோலைகவுண்டன்பட்டியில் ஒன்றிய செயலர் பேசியதாவது: காரியாபட்டி, திருச்சுழி பகுதி விவசாயிகள் பலன் பெறும் வகையிலான சென்னம்பட்டி கால்வாய் திட்டம், நிலையூர்-கம்பிக்குடி திட்டம் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளன.

  இத்திட்டங்கள் நிறைவேற்றப்பட அதிமுக வேட்பாளர் அன்வர்ராஜாவை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்றார்.

Advertisement

  மாவட்டப் பிரதிநிதி ஆவுடையம்மாள், டாஸ்மாக் தொழிற்சங்க தலைவர் வேல்முருகன், கிளைச் செயலர்கள் கணபதி, ராமநாதன், அச்சங்குளம் சீனிவாசன், விஜயன், ஊராட்சித் தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் உடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.