மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே எம். ரெட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ. நிதியில், மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கு
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே எம். ரெட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ. நிதியில், மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆணையாளர் உமாராணி, தலைமை வகித்தார்.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலர் மணிமாறன் வரவேற்றார். தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ., 88 பயனாளிகளுக்கு, ரூ.3 லட்சத்து 73 ஆயிரத்து 250 நிதியில், 3 சக்கர சைக்கிள்கள், சக்கர நாற்காலிகள், ஊன்று கோல்கள் வழங்கினார்.
ஒன்றிய கவுன்சிலர் சேதுராமன், மாற்றுத் திறனாளிகள் இளநிலை மறுவாழ்வு அலுவலர் பாலசுந்தரம், திமுக. ஒன்றிய செயலர் பொன்னுதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement