விருதுநகர்

விலையில்லா பொருள்கள் வழங்கல்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அருகேயுள்ள வையம்பட்டியில் தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அருகேயுள்ள வையம்பட்டியில் தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

   நிகழ்ச்சிக்கு காரியாபட்டி வட்டாட்சியர் பொன்ராமர் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர்கள் சரவணன், ராஜபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் விமலா, துணைத் தலைவர் அம்சவள்ளி, கூட்டுறவு வங்கித் தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   காரியாபட்டி ஒன்றியக்குழு தலைவர் முத்துலெட்சுமி, துணைத் தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் 348 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பொருள்களை வழங்கிப் பேசினர்.    ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் முத்துப்பாண்டி, மண்டல துணை வட்டாட்சியர் அறிவழகன், வருவாய் ஆய்வாளர் கண்மனி, கிராம நிர்வாக அலுவலர் சட்டநாதன், மல்லாங்கிணர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர்கள் கண்ணன், ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர்கள் சங்கரசபாபதி, கிருஷ்ணன், டெல்லி ராமு, கிளை செயலாளர்கள் பாண்டி, ராமநாதன், கிராம உதவியாளர்கள் மாரிசெல்வம், ரவிச்சந்திரன் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT