காரியாபட்டியில் இந்தியன் வங்கி கிளை திறப்பு
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இந்தியன் வங்கி கிளையை மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார். அதன்படி காரியாபட்டியில் இந்தியன் வங்கி கிளை
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இந்தியன் வங்கி கிளையை மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார். அதன்படி காரியாபட்டியில் இந்தியன் வங்கி கிளை அலுவலக துவக்க விழா திருநெல்வேலி மண்டல துணைப் பொது மேலாளர் அமுது தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் காந்திமதி, முன்னாள் துணைத் தலைவர் பழனி, கிளை மேலாளர் ஜெயபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கார்ப்பரேட் சென்னை அலுவலக துணை பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றி வங்கி அலுவல்களை துவக்கி வைத்தார். மண்டல உதவிப் பொது மேலாளர் சங்கர், வர்த்தகர் சங்க தலைவர் சுப்பையா நாடார், ஆசிரியர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், பால் கூட்டுறவு சங்கத் தலைவர் பாண்டியராஜன், நெல்லை மாவட்ட முதன்மை மேலாளர் இளவரசு உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.