மல்லாங்கிணர்: மர்ம காய்ச்சலால் 60 பேர் பாதிப்பு
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் பகுதியில் மர்ம காய்ச்சல் தாக்கியதில் 60-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் பகுதியில் மர்ம காய்ச்சல் தாக்கியதில் 60-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.
இப் பகுதியில் உள்ள திம்மன்பட்டி கிராமத்தில் கடந்த 5 நாள்களாக கடுமையான காய்ச்சல் பரவியதில் 60-க்கும் மேற்பட்டோர் மல்லாங்கிணர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 30-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் தனியார் மருத்துவமனைகளிலும் பலர் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். திம்மன்பட்டி வார்டு கவுன்சிலர் வீரலெக்கன் கூறியதாவது: கடந்த ஒரு வாரகாலமாக திம்மன்பட்டியில் பலர் மர்ம காய்ச்சல் தாக்கி பாதிப்படைந்துள்ளனர். நோயாளிகளுக்கு மல்லாங்கிணர் அரசு மருத்துவமனையில் சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படாததால் 50-க்கும் மேற்பட்டோர் விருதுநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
தற்போது பாண்டி (50), பன்னீர் (45), கணேசன் (26), ஒச்சம்மாள் (40), மூக்கன் (30) உள்பட 30-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். மர்மகாய்ச்சல் நோய் குறித்து மல்லாங்கிணர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலரிடம் கேட்டபோது பதில் கூற மறுத்துவிட்டார்.