முகப்பு
விருதுநகர்

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மோட்டார் சைக்கிள் வழங்கல்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் வியாழக்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மோட்டார் சைக்கிள்களை திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

Updated On : 28 பிப்ரவரி, 2014 at 12:21 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:01 AM

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் வியாழக்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மோட்டார் சைக்கிள்களை திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 54 ஆயிரம் மதிப்பீட்டில் 4 மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாற்று நலஅலுவலர் மணிமாறன், பேரூராட்சி தலைவர் நாகையா, முன்னாள் துணைத் தலைவர் போஸ், நகர செயலாளர் முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

  திருச்சுழி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மோட்டார் சைக்கிள்களை வழங்கிப் பேசினார். மாவட்ட திமுக துணைச் செயலாளர் ரூபசுந்தரி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சரஸ்வதி, ஊராட்சி மன்றத் தலைவர் ராஜாமாணிக்கம், அருப்புக்கோட்டை நவநீதன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் சம்பத் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.