அனுமதியின்றி மணல் அள்ளி வந்த லாரிகளை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 லாரிகளை பொதுமக்கள் உதவியுடன், பஞ்சாயத்து தலைவர் மடக்கிப் பிடித்தார். அந்த 2 லாரிகளையும் அவர் போலீசில்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 லாரிகளை பொதுமக்கள் உதவியுடன், பஞ்சாயத்து தலைவர் மடக்கிப் பிடித்தார். அந்த 2 லாரிகளையும் அவர் போலீசில் ஒப்படைத்தார்.
திருச்சுழி அருகே வீரசோழன் கிராமத்தில் அனுமதியின்றி மணல் அள்ளும் லாரிகள் இரவு நேரங்களில் வந்து செல்கின்றனவாம். வீரசோழன் கிராம பஞ்சாயத்து தலைவர் முஸ்தபா, கிராம மக்களுடன் அங்குள்ள சந்தை திடலில் லாரிகளின் போக்குவரத்தை கண்காணித்துக் கொண்டிருந்தார்.
அப்போது 2 மணல் லாரிகள் வேகமாக வந்தன. அவற்றை பொதுமக்கள் உதவியுடன் பஞ்சாயத்துத் தலைவர் முஸ்தபா மடக்கிப் பிடித்து வீரசோழன் போலீசில் ஒப்படைத்தார். வீரசோழன் போலீஸார் இதுபற்றி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Advertisement