முகப்பு
விருதுநகர்

திட்ட அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரை கண்டித்து தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 13 ஜூன், 2014 at 12:22 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:05 AM

குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரை கண்டித்து தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காரியாபட்டியில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலராக அன்புகுளோரியா உள்ளார். இவர் மீது பணியாளர்கள் புகார்களை அளித்தனர். இதனால் அன்புகுளோரியாவை மாற்றம் செய்யும் வரை அவர் விடுப்பில் இருப்பார் என திட்ட அலுவலர் யுவராணி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தாற்காலிக விடுப்பில் இருந்த அன்புகுளோரியா மீண்டும் காரியாபட்டியில் பணி அமர்த்தப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் கடந்த பிப்ரவரி மாதம் போராட்டம் நடத்தினர். அன்று விடுப்பில் சென்ற அன்புகுளோரியா நான்கு மாதம் கழித்து புதன்கிழமை மீண்டும் காரியாபட்டி அலுவலகத்துக்கு பணிக்கு வந்தார். இதனால் அனைத்து அங்கன்வாடி பணியாளர்கள், சமையலர் என 150-க்கும் மேற்பட்டோர் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்தப் போராட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியர் கிளைத் தலைவர் கல்தூரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை கிளை செயலாளர் சீராளன், பொருளாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரும் அன்புகுளோரியா இருந்தால் அலுவலகம் வரமாட்டோம். அவரை பணிமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க வட்டாரப் பொருளாளர் ராமமூர்த்தி, சத்துணவு சங்க மாவட்ட பிரதிநிதி முத்துராமலிங்கம், சிஐடி ஒன்றிய செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.