பேச்சியம்மன் கோயில் மாசிக்களரி திருவிழா
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் அருகேயுள்ள கீலதுலுக்கன்குளம் பேச்சியம்மன் கோயிலில் மாசிக்களரி திருவிழா 10 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது.
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் அருகேயுள்ள கீலதுலுக்கன்குளம் பேச்சியம்மன் கோயிலில் மாசிக்களரி திருவிழா 10 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது.
100-க்கும் மேற்பட்ட பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். புதன்கிழமை பல்வேறு அபிஷேகத்துடன், அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு தீச்சட்டி எடுத்து வழிபட்டனர்.
வில்லிபத்திரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வி.டி.பாலகிருஷ்ணன், மதுரை மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் குருசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். திருவிழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை பேச்சியம்மன் திருக்கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Advertisement