முகப்பு
விருதுநகர்

40 தொகுதிகளிலும் வெற்றி: தேமுதிக கூட்டத்தில் பேச்சு

மல்லாங்கிணரில் தேமுதிக கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு விருதுநகர் மாவட்டச் செயலர் வைரமுனி பேசியதாவது: விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது பலர் புதிதாக கட்சியில் சேர்ந்து

Updated On : 19 மார்ச், 2014 at 12:12 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:14 AM

மல்லாங்கிணரில் தேமுதிக கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு விருதுநகர் மாவட்டச் செயலர் வைரமுனி பேசியதாவது: விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது பலர் புதிதாக கட்சியில் சேர்ந்து பதவிகளைப் பெற்றனர். பின்னர் மாற்றுக்கட்சியில் இணைந்து பதவி சுகத்தினை அனுபவித்து வருகின்றனர். தற்போது அந்தக் காலத்தில் விஜயகாந்த் ரசிகர்களாக இருந்தவர்கள் தான் கட்சிப் பதவிகளில் உள்ளனர். இனி தேமுதிகவை அழிக்க நினைப்பவர்கள் தானாக அழிந்து போவார்கள். நரேந்திரமோடி, விஜயகாந்த் கூட்டணியால் தமிழக அரசியலில் சுனாமி ஏற்பட்டுள்ளது. நாற்பது தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்றார். ஒன்றியச் செயலர் வடுகன், தலைவர் ஆனந்தகுமார், நகரத் தலைவர் முருகேசன், செயலர் சிவராமன், மாவட்ட துணைச் செயலர் பூவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.