முகப்பு
விருதுநகர்

"புதிய கட்டடத்தில் சந்தை செயல்பட வேண்டும்'

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள கட்டனூரில் செயல்படும் வாரச்சந்தை அதற்குரிய கட்டடத்தில் செயல்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 2 மே, 2014 at 12:12 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:39 AM

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள கட்டனூரில் செயல்படும் வாரச்சந்தை அதற்குரிய கட்டடத்தில் செயல்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி பொதுமக்கள் சார்பில் விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜா, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கட்டனூரில் வாரம் ஒருமுறை சந்தை நடைபெறும்.

நாலூர், அழகாபுரி, ஏ.முக்குளம், கருவக்குடி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து, பொதுமக்கள், வியாபாரிகள் சந்தைக்கு வருகின்றனர். இதற்காக ஊரில், 2006இல் கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், ஆறு ஆண்டுகளாக அங்கு சந்தை நடைபெறவில்லை. அதற்குப் பதிலாக ஊராட்சி துவக்கப்பள்ளி அருகே, இடநெருக்கடியில், சந்தை நடைபெற்று வருகிறது. ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் இருப்பிடமாக சந்தை உள்ளது.

Advertisement

இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

எனவே, வாரச் சந்தைக்கு என கட்டப்பட்ட இடத்தில், அது முறையாக செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.