முகப்பு
விருதுநகர்

கழிவுநீர் கால்வாய் கட்டக் கோரிக்கை

காரியாபட்டி பேருந்து நிலையம் அருகில் அரசு பெண்கள் பள்ளி உள்ளது. தெருக்களில் இருந்து வெளியே வரும் கழிவுநீர் கால்வாய் அடைபட்டுள்ளதால் செல்ல முடியவில்லை. காரியாபட்டி

Updated On : 12 மே, 2014 at 12:10 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:44 AM

காரியாபட்டி பேருந்து நிலையம் அருகில் அரசு பெண்கள் பள்ளி உள்ளது. தெருக்களில் இருந்து வெளியே வரும் கழிவுநீர் கால்வாய் அடைபட்டுள்ளதால் செல்ல முடியவில்லை. காரியாபட்டி அருப்புக்கோட்டை மெயின்ரோட்டில் உள்ள இந்தக் கால்வாய் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த பகுதியில் கடைகள், மருத்துவமனைகள், அரசு பெண்கள் பள்ளி அருகில் பேருந்து நிலையம் போன்ற மக்கள் அதிகம் நடமாடும் பகுதி உள்ளது. மழைக் காலங்களில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வகாத்திடம் முறையிட்டால் சாக்கடை செல்லும் பாலம் நெடுஞ்சாலைதுறையை சேர்ந்தது என்று பதில் அளிக்கின்றனர். நெடுஞ்சாலைதுறையை கேட்டால் பேரூராட்சியைச் சேர்ந்தது என்கின்றனர்.

மழைக் காலங்களில் கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து வருவதால் வாகனங்கள் செல்வதற்கும், பாதசாரிகள் நடந்து செல்வதற்கும் சிரமப்படுகின்றனர்.

இந்த பாலத்தை பேரூராட்சியோ அல்லது நெடுஞ்சாலைத்துறையோ சீரமைத்து துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.