ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண் மானபங்கம்: சித்தப்பா மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணை மானபங்கள் செய்ததாக அவரது சித்தப்பாவும் ஊராட்சி மன்ற எழுத்தருமான முருகன் என்பவர் மீது
விருதுநகர்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண் மானபங்கம்: சித்தப்பா மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணை மானபங்கள் செய்ததாக அவரது சித்தப்பாவும் ஊராட்சி மன்ற எழுத்தருமான முருகன் என்பவர் மீது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணை மானபங்கள் செய்ததாக அவரது சித்தப்பாவும் ஊராட்சி மன்ற எழுத்தருமான முருகன் என்பவர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள குன்னூர், நல்லகண்ணு கீழத் தெருவைச் சேர்ந்தவர் வைகுண்டம் மகள் இந்திரா (23). இவருடன் பிறந்தவர்கள் இரு பெண்கள். மூத்தவருக்கும் இளையவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. இந்திராவிற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் கை, கால் வராமல் போய்விட்டதாம். தற்போது குணமாகியுள்ள நிலையில் திருமணம் செய்யாமல் இருந்துள்ளார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் தனது பாட்டியின் வீட்டின் அருகே இந்திரா நின்று கொண்டிருந்தாராம். அப்போது வீட்டின் அருகே குடியிருக்கும் குன்னூர் ஊராட்சி மன்றத்தின் எழுத்தராக வேலை செய்து வரும் இந்திராவின் சித்தப்பா கு.முருகன் (50) என்பவர், இந்திராவை தனது வீட்டிற்குள் போகச் சொன்னாராம். இவர் வீட்டிற்குள் சென்றதும் பின்னால் வந்த முருகன், இந்திராவின் வாயைப் பொத்தி மிரட்டி மானபங்கம் செய்தாராம்.
மேலும் இந்த சம்பத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக முருகனும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி திட்டம் அலுவலகத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வரும் முருகனின் மனைவி எலிசபெத்தும் சேர்ந்து மிரட்டினார்களாம்.
இது குறித்து இந்திரா, வெள்ளிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் முருகன், எலிசபெத் மீது வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகிறார்கள்.