விருதுநகர்

பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக ராணுவ வீரர் கைது

அருப்புக்கோட்டையில் இருந்து சுத்தமடத்துக்கு அரசுப் பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. பேருந்தில் சிவயோகன் ஓட்டுநராகவும், சண்முகசுந்தரம் நடத்துநராகவும் இருந்தனர்.

கல்யாணி வெங்கடராமன்

அருப்புக்கோட்டையில் இருந்து சுத்தமடத்துக்கு அரசுப் பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. பேருந்தில் சிவயோகன் ஓட்டுநராகவும், சண்முகசுந்தரம் நடத்துநராகவும் இருந்தனர். பேருந்து ரெட்டியபட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்த பகுதியில் சாலை மோசமாக இருந்ததால் பேருந்தை ஓட்டுநர் மெதுவாக ஓட்டி சென்றாராம். அப்போது பேருந்தில் பயணம் செய்த விஜயகுமார், பாண்டியராஜ் ஆகியோர் அவரிடம் தகராறு செய்தனர். தகராறு முற்றி ஓட்டுநர் சிவயோகனை 2 பேரும் சேர்ந்து தாக்கினராம். இதுகுறித்து ரெட்டியபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிந்து விஜயகுமாரை கைது செய்தனர். கைதான விஜயகுமார் மற்றும் போலீஸார் தேடி வரும் பாண்டியராஜ் ஆகியோர் ராணுவ வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT