முகப்பு
விருதுநகர்

காரியாபட்டி அருகே ஏ.டி.எம். கொள்ளையர்கள் கைது

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய இருவரை

Updated On : 8 நவம்பர், 2014 at 12:41 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:49 PM

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆவியூர் போலீஸார் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிசாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி அருகில் ஆம்னி வேன் நின்று கொண்டிருந்தது. வேனில் இருந்த 4 பேரும் முன்னுக்குப் பின்னாக போலீஸாரிடம் பேசினர். சந்தேகமடைந்த போலீஸார் வேனை சோதனையிட்டபோது அரிவாள், கத்தி, கடப்பாறை, கோடாரி, டெட்டனேட்டர், ஜெலட்டின்குச்சி, கரிமருந்து போன்ற ஆயுதங்கள், வெடிபொருட்கள் இருந்தன.

அவர்களிடம் மேலும் நடத்திய விசாரணையில் 4 பேரும் சேலம் மாவட்டம் இடைப்பாடியைச் சேர்ந்த மாணிக்கம், யுவராஜ், கார்த்திக், பிரபாகரன் என்பது தெரிய வந்தது. இவர்களுடன் வந்த விஸ்வநாத், சையது ஆகிய இருவரும் சேது பொறியியல் கல்லூரியில் உள்ள ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்கச் சென்றுள்ளதாகவும் கூறினர். போலீஸார் சென்று பார்த்த போது இருவரும் தப்பிச் சென்று விட்டனர்.

Advertisement

ஆவியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வேனை கைப்பற்றியதுடன் 4 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.