விவசாயப் பயிர்களில் புழு தாக்குதல்
திருச்சுழி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து, பாசிப்பயறு போன்ற பயிர்கள் புழுக்கள் தாக்குதலால் நாசமாகி வருகின்றன.
திருச்சுழி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து, பாசிப்பயறு போன்ற பயிர்கள் புழுக்கள் தாக்குதலால் நாசமாகி வருகின்றன.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பகுதியிலுள்ள எம்.ரெட்டியபட்டி, சிலுக்குபட்டி, மண்டபசாலை, வடக்குநத்தம் ஆகிய கிராமங்களில் உளுந்து, கம்பு, பாசிப்பயிறு, மக்காச்சோளம் போன்ற பணப்பயிர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளன. இந்தப் பயிர்களில் தற்போது புழுக்கள் தாக்கியுள்ளன. இதனால் விவசாயிகள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மண்டபசாலையை சேர்ந்த விஜயன் என்ற விவசாயி கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மழை பொய்த்ததால் விவசாயம் செய்ய முடியாத நிலை இருந்தது. தற்போது பருவமழை பெய்தது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. ஆனால் பாசிப்பயறு, உளுந்து போன்ற பயிர்களில் கடந்த 20 நாள்களாக புழுக்கள் உருவாகி நாசம் செய்து வருகின்றன. இதனால் ஏராளமான ஏக்கரில் பயிரிடப்பட்ட பாசிப்பயறு மற்றும் உளுந்து பயிர்கள் முற்றிலும் நாசமடைந்து வருகின்றன. வேளாண்மைத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Advertisement