தனியார் பள்ளிக்கு மாணவர்களை பரிந்துரைத்த அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் குறித்து கலெக்டரிடம் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். இப்புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக, முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
காரியாபட்டி அருகேயுள்ள தோணுகால் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக பசீர் அகமது பணியாற்றி வருகிறார். இவர், பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களை அடுத்த கல்வியாண்டில், 6-ஆம் வகுப்பிற்கு அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினாராம். இது தொடர்பாக மாணவர்கள் பெற்றோர்களிடத்தில் தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக பெற்றோர் சிலர் தலைமை ஆசிரியரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர், தலைமை ஆசிரியர் பசீர் அகமது மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் ராஜாராமனிடம் புகார் தெரிவித்தனர்.
தலைமை ஆசிரியர் பசீர் அகமது மீதான புகார் குறித்து விசாரித்து வருவதாகவும், புகாரில் உண்மை இருப்பின் உரிய நடவடிககை எடுக்கப்படும், என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.