காரில் கஞ்சா கடத்திய இருவர் கைது
காரில் 16 கிலோ கஞ்சா கடத்தியதாக இருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியிலிருந்து மதுரை செல்லும் நான்கு வழிச்சாலையில் ஆய்வாளர்
காரில் 16 கிலோ கஞ்சா கடத்தியதாக இருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியிலிருந்து மதுரை செல்லும் நான்கு வழிச்சாலையில் ஆய்வாளர் விஜயகுமார், சார்பு ஆய்வாளர் அசோக்குமார் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
திங்கள்கிழமை அதிகாலை அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 16 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
Advertisement
காரில் இருந்த காரியாபட்டியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி மிசா சாமிக்கண்ணு, டிரைவர் கன்னியப்பன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக காரியாபட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கஞ்சா கடத்த பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.