மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி
சிவகாசி சதுரங்க கழகம், சன் பயர் ஒர்க்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து சிவகாசியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை நடத்தின.
சிவகாசி சதுரங்க கழகம், சன் பயர் ஒர்க்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து சிவகாசியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை நடத்தின.
13 வயதுக்குள்பட்ட மாணவ மாணவிகள், மாநில போட்டியில் கலந்து கொள்ள தேர்வுப்போட்டி நடைபெற்றது. இதில் விருதுநகர் கே.வி.எஸ். பள்ளி ஏ.குமரேஷ் முதலிடமும், சிவகாசி காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பி.விஷ்ணுவிஸ்வநாதன் இரண்டாமிடத்தையும் பிடித்தனர். மாணவியர் பிரிவில் சிவகாசி அரிமா மெட்ரிக் பள்ளி பி.அக்ஷயா முதலிடமும், விருதுநகர் ஸ்ரீ வித்யா பள்ளி எஸ்.ஸ்ரீமதி இரண்டாமிடமும் பெற்றனர். இவர்கள் ஜூலை மாதம் ஓசூரில் நடைபெற உள்ள தமிழ்நாடு மாநில 13 வயதுக்குள்பட்டோர் பிரிவுக்கான சாம்பியன்ஷிப் சதுரங்கப் போட்டியில் விருதுநகர் மாவட்டம் சார்பில் கலந்து கொள்வார்கள்.
17 வயதுக்குள்பட்டோர் பிரிவில் சிவகாசி அரிமா மெட்ரிக் பள்ளி கே.கே.ராஜாசக்திவேல் முதலிடத்தையும், மாணவிகள் பிரிவில் அதே பள்ளி கே.கே.ஜெயஸ்ரீ முதலிடமும் பெற்றனர். 9 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் விருதுநகர் கே.வி.எஸ். பள்ளி எம்.தனஞ்செயன் முதலிடமும், மாணவிகள் பிரிவில் அதே பள்ளி எஸ்.ராதிகா முதலிடமும் பெற்றனர்.
Advertisement
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சன்பயர் ஒர்க்ஸ் உரிமையாளர் ஏ.ரமேஷ் பரிசு வழங்கினார். எஸ்.ஆர்.ராஜன் நன்றி கூறினார்.