முகப்பு
தமிழ்நாடு

தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டி

தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளது குறித்து...

ஓ.எஸ். மணியன் - ஏஎன்ஐ
பகிர்:

தமிழக வெற்றிக் கழகத்துக்கு அதிமுக ஆதரவு அளிக்காது என வேதாரண்யத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன் இன்று (மே 5) தெரிவித்தார்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த திமுக 73 இடங்களுடன் எதிர்க்கட்சி இடத்தைப் பெற்றுள்ளது.

அதிமுக சார்பில் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்ட ஓ.எஸ். மணியன் 59,172 வாக்குகளுடன் 7331 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Advertisement

Advertisement

தேர்தல் வெற்றிக்குப் பிறகு சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஓ.எஸ். மணியன் இன்று (மே 5) வாழ்த்துப் பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தவில்லை. அவரிடம் ஆசி பெறுவதற்காகவே வந்தோம். அவரை சந்தித்து வாழ்த்து பெற்றோம். தமிழ்நாட்டில் பெரிய கட்சி அதிமுக எனக் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளிக்கும் நிலை ஏற்பட்டால் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், '' ஆதரவு அளிக்கமாட்டோம்'' என பதில் அளித்தார்.

அதிமுக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்ற தொழிலதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்கும் விஷயத்தில் சுமூக தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு எடப்பாடி பழனிசாமியுடன் தவெகவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியிருந்தார்.

தற்போது அதிமுகவைச் சேர்ந்த இரு சட்டப்பேரவை உறுப்பினர்கள் தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து மாறுபட்ட கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments