விருதுநகர்

குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகிக்க கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நரிக்குடி அருகே உளுத்திமடை கிழக்கு காலனியில் 60 குடியிருப்புகள் உள்ளன.

இவர்களின் குடிநீர் தேவைக்காக 3 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்நிலையில் செங்கமடையில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், தொட்டி கட்டப்பட்ட நாளிலிருந்து அதில் தண்ணீர் ஏற்றப்பட வில்லை. இன்று வரையிலும் அந்த குடிநீர் தொட்டி காட்சிப் பொருளாகவே உள்ளது.

தற்போது இந்த பகுதி மக்களுக்கு திருப்பாச்சேத்தி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து வாரம் ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் இது போதுமானதாக இல்லை. இதனால் குடிநீருக்காக மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.

செங்கமடையில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து அந்த மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்தாவது குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு: திருப்பரங்குன்றம் மலையில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

குப்பை கொட்ட எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்: நூற்றுக்கும் மேற்பட்டோா் கைது

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய பொக்லைன் வாகனம், டிப்பா் லாரி பறிமுதல்

பவானிசாகா் அருகே 200 வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

SCROLL FOR NEXT