தொகுதி அலசல்:ஸ்ரீவில்லிபுத்தூர் "பால்கோவா'வுக்கு பலத்த போட்டி
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே அரசு முத்திரைச் சின்னம், பால்கோவா என்ற ஞாபகம் வரும். அதேபோல் அரசியலில் தாமரைக்கனி என்ற பெயரைக் கேட்டாலே ஸ்ரீவில்லிபுத்தூர் என்பார்கள். 1967ஆம் ஆண்டுமுதல் இதுவரை நடைபெற்ற 11 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக 7 முறையும், திமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
விருதுநகர்தொகுதி அலசல்:ஸ்ரீவில்லிபுத்தூர் "பால்கோவா'வுக்கு பலத்த போட்டி
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே அரசு முத்திரைச் சின்னம், பால்கோவா என்ற ஞாபகம் வரும். அதேபோல் அரசியலில் தாமரைக்கனி என்ற பெயரைக் கேட்டாலே ஸ்ரீவில்லிபுத்தூர் என்பார்கள். 1967ஆம் ஆண்டுமுதல் இதுவரை நடைபெற்ற 11 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக 7 முறையும், திமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே அரசு முத்திரைச் சின்னம், பால்கோவா என்ற ஞாபகம் வரும். அதேபோல் அரசியலில் தாமரைக்கனி என்ற பெயரைக் கேட்டாலே ஸ்ரீவில்லிபுத்தூர் என்பார்கள். 1967ஆம் ஆண்டுமுதல் இதுவரை நடைபெற்ற 11 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக 7 முறையும், திமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இதில் தாமரைக்கனி 4 முறை அதிமுக சார்பிலும், ஒரு முறை சுயேச்சையாகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒரு முறை அவரது மகன் இன்பத்தமிழன் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார்.
தற்போது நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் அதிமுக, புதிய தமிழகம் (திமுக கூட்டணி), இந்திய கம்யூனிஸ்ட், பாரதீய ஜனதா, நாம் தமிழர், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட 16 பேர் களத்தில் உள்ளனர். இருந்தாலும் மு.சந்திரபிரபா (அதிமுக), செ.முத்துக்குமார் (புதிய தமிழகம்), பொ.லிங்கம் ஆகிய மூவருமே முன்னணியில் உள்ளார்கள்.
அதிமுகவின் பலம், பலவீனம்: அதிமுகவில் மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளராக இருந்த மு.சந்திரபிரபா, அயன் நாச்சியார்கோவில் ஊராட்சி மன்றத் தலைவியாக உள்ளார். 10 ஆண்டுகளாக உள்ள இவர், தற்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர கூட்டுறவு வங்கியின் இயக்குநராகவும் உள்ளார். இவரது மாமனார் அதிமுகவில் இருந்தது, கட்சியின் சின்னம், அரசின் சாதனைகள் இவருடைய பலமாக உள்ளது.
வத்திராயிருப்பு ஒன்றியத்தில் அறிமுகம் இல்லாதது, சீட் கிடைக்காதவர்களின் அதிருப்தி போன்றவையே பலவீனமாகும். இருந்தாலும்,கட்சிக்காக நிர்வாகிகள் வேட்பாளருடன் சென்று தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி, தற்போது அதிமுக நேரிடையாக களம் காண்பது கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய தமிழகம் பலம், பலவீனம்:
புதிய தமிழகம் வேட்பாளர் செ.முத்துக்குமார் தொகுதிக்கும் அரசியலுக்கும் புதியவர். பொறியியல் பட்டதாரியான இவருக்காக கட்சிக்கென சில பகுதிகளில் வாக்குகள் இருப்பது பலமாக உள்ளது. இருந்தாலும் அவர்கள் சார்ந்துள்ள சமுதாயத்தில் அனைத்துக் கட்சியினரும் உள்ளனர். இத் தொகுதியை திமுகவிற்கு ஒதுக்கப்படாதது கட்சியினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பது பலவீனமாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:
மக்கள் நலக் கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் பொ.லிங்கம், கடந்த முறை தென்காசி மக்களவை உறுப்பினராக இருந்தவர். இவரது சொந்த ஊர் தொகுதியில் உள்ள கான்சாபுரம். கடந்த மக்களவைத் தேர்தலின் போது கிடைத்த வாக்குகள் தற்போது அப்படியே கிடைக்கும் என்பதும்,ஆளும் கட்சிக்கு எதிரான பிரசார யுக்தி ஆகியவையே தங்களது பலமாக நம்பியுள்ளார். மக்களவை உறுப்பினராக இருந்தபோது பொதுமக்களிடம் ஏற்பட்ட அதிருப்தி இவரது பலவீனமாக உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி:
பாஜக சார்பில் போட்டியிடும் ஹோமியோபதி மருத்துவர் ராமசாமிக்கு வத்திராயிருப்பு, மம்சாபுரம், மங்காபுரம், பெருமாள்பட்டி, வன்னியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நாடார் சமுதாய வாக்குகள் தங்களுக்கு பலமாக அமையும் என்று நம்பியுள்ளார். மேலும், மோடி அரசின் கொள்கைகள், தமிழக பாஜக பிரசார யுக்திகள் கூடுதல் பலம் என்கின்றனர்.
பாமக:
பாமக சார்பில் போட்டியிடும் வெள்ளைச்சாமி தொகுதி மக்களால் அறியப்படாதவர். மேலும், கட்சிக்கு என தனிப்பட்ட வாக்கு வங்கி ஏதும் இத்தொகுதியில் இல்லை. பிரசாரத்தையே நம்பியுள்ள இவருக்கு எந்த அளவிற்கு கைகொடுக்கும் என்பது தெரியவில்லை. ஆகவே, சிறப்பு வாய்ந்த பால்கோவா தொகுதியை கைப்பற்ற பலத்தப் போட்டி நிலவுகிறது.
-கோ.ஜெயக்குமார்