விருதுநகர்

2 மாத சம்பளம் வழங்கவில்லை: விருதுநகர் நகராட்சி ஆணையரை ஊழியர்கள் முற்றுகை

DIN

விருதுநகர் நகராட்சியில் 2 மாத சம்பளம் வழங்கப்படாததால் புதன்கிழமை நகராட்சி ஆணையாளரை ஊழியர்கள் முற்றுகையிட்டனர். 
     விருதுநகர் நகராட்சியில் பொறியியல் பிரிவு, நகரமைப்பு பிரிவு, வருவாய் பிரிவு, வரி வசூல் பிரிவு, துப்புரவு ஆய்வாளர்கள், வாகன ஓட்டுநர்கள் என ஏராளமானோர் பணி புரிந்து வருகின்றனர். 
     மேலும், நிரந்தர துப்புரவு பணியாளர்கள், தினக்கூலி துப்புரவு பணியாளர்கள் என150 க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், முறையாக வரி வசூல் செய்யாததால், பொதுமக்களிடமிருந்து ரூ. 3 கோடி வரை வரி பாக்கி நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் ஊழியர்களுக்கு கடந்த அக்டோபர், நவம்பர்  மாதங்களுக்கான சம்பளம்  வழங்கப்படவில்லை. இதனால், ஊழியர்கள் பலர் கடன் வாங்கி செலவு செய்து வருகின்றனர். மேலும், அத்தியாவசியத் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வந்தனர். இதையடுத்து, ஆத்திரமடைந்த பணியாளர்கள், நகாரட்சி ஆணையாளர் சந்திரசேரனை புதன்கிழமை முற்றுகையிட்டனர். அதற்கு அவர், பொது நிதி இல்லாததால் சம்பளம் வழங்க முடியவில்லை. அதனால், உடனடியாக சம்பளம் கிடைக்கும் ஊருக்கு மாறுதல் வாங்கி செல்லுங்கள் என்றார். 
    இதற்கு பணியாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர், விரைவில் அனைவருக்கும் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கிறேன் என உறுதியளித்தார். அதன் பின்னர் பணியாளர்கள் வேலைக்கு சென்றனர்.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT