விருதுநகர்

பள்ளிகள் அருகே சுகாதாரமற்ற உணவு பொருள்கள் விற்பனை

DIN

ராஜபாளையம் பகுதியில் பள்ளிகளின் அருகே சுகாதாரமற்ற உணவு பொருள்கள் விற்பனையால் மாணவர்கள் பாதிப்படைகின்றனர்.  
ராஜபாளையம் பகுதியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளின் எதிரே சுகாதாரமற்ற வகையில் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
கழிவு நீர் செல்லும் வாய்க்கால் பகுதியை யொட்டி தின்பண்ட கடைகள் உள்ளன. நோய் பரப்பும் காரணிகளான ஈ, கொசு, விஷ பூச்சிகள் தின்பண்டங்கள் மீது அமர்கின்றன.  வியாபாரிகள் பொருள்களை மூடி வைப்பதும் கிடையாது.
மேலும் பாலிதீன் பைகளில் அடைத்து  இனிப்பு பண்டங்களும், மிட்டாய்களும் ஏராளமாக விற்கப்படுகிறது. சில கடைகளில் காலாவதியான மிட்டாய், தின்பண்டங்களையும் விற்பனை செய்கின்றனர்.
இதுபோன்ற சுகாதார உணவுப் பண்டங்களால் மாணவர்கள்  வாந்தி, வயிற்று போக்கு உள்ளிட்ட பாதிப்பிற்குள்ளாகின்றனர்.  
எனவே சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT