விருதுநகர்

மாநில நெடுஞ்சாலைகளில் குவிந்துள்ள மணலால் விபத்துகள்

DIN

விருதுநகர் பகுதியில் நெடுஞ்சாலைகளில் குவிந்து கிடக்கும் மணலால்,  இருசக்கர வாகனத்தில் செல்வோர் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
 விருதுநகர்-மதுரை சாலை,  ஆத்துப்பாலம் முதல் மேம்பாலம் வரையிலான சிவகாசி சாலை,  எம்ஜிஆர்சிலை முதல் ரயில்வே கடவு சாலை வரையிலான சாத்தூர் சாலை,  பாண்டியன் நகர் வழியாக மல்லாங்கிணர் செல்லும் சாலை,  அருப்புக்கோட்டை சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் இருபுறங்கள் மட்டுமல்லாது,  சாலையில் மைய பகுதிகளிலும் மணல் தேங்கி யுள்ளது.
தற்போது, ஆடி மாதம் பிறந்து விட்டதால் காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது.  சாலையோரங்களில் உள்ள மணல், தூசி காற்றில் பரவி வாகன ஓட்டிகள் மேல் விழுகிறது.
இதனால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர்.
மேலும், சாலைகளில் மணல்கள் பரவி கிடக்கும் நிலையில் கனரக வாகனங்கள் வரும் போது சாலையோரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மணலில் சறுக்கி விபத்துகளை சந்தித்து வருகின்றனர். இதனால் காயங்கள் முதல் உயிரிழப்பு வரை ஏற்படுகிறது. அதே போல் ராமமூர்த்தி சாலையில் அரசு தலைமை மருத்துவமனை முதல் அல்லம்பட்டி முக்குரோடு வரையிலான மாநில நெடுஞ்சாலை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது.  இதனால் சாலையின் உயரம் அதிகரித்தது.
  ஆனால்,  சாலையின் இருபுறமும் பள்ளமாக உள்ளதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனங்கள் வரும் போது சாலையோரத்தில் இறங்கி, ஏறுவதால் சறுக்கி கனரக வாகனங்களில் விழுந்து விபத்துக்களை சந்திக்கின்றனர்.
ராமமூர்த்தி ரோட்டில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் நான்கு விபத்துகள் ஏற்பட்டுள்ளன.  எனவே, விருதுநகர் பகுதியில் சாலையோரங்களில் தேங்கியுள்ள மணல் குவியலை அகற்ற நெடுஞ்சாலை துரை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT