விருதுநகர்

அருப்புக்கோட்டையில் கலப்பட டீ தூள் விற்பனையை தடுக்க கோரிக்கை

DIN

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கலப்பட டீ தூள் விற்பனையாவதைத் தடுக்க வேண்டுமென சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அருப்புக்கோட்டை நகர் மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள தேநீர் கடைகளுக்கு கலப்பட டீ தூள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கலப்பட டீ தூளில் சேர்க்கப்படும் துரித ரசாயனங்கள் மற்றும் நிறமிகள் ஆகியவை தேநீர்க்கு அதிக அடர்த்தியான நிறத்தைத் தருவதுடன், டீ தூளை அடிக்கடி மாற்றவேண்டியதுமில்லை எனக் கூறப்படுகிறது.    இந்த கலப்பட டீ தூள் பல தேநீர் கடைகளில் உபயோகிக்கப்படுகின்றன. தரமற்ற இத்தகைய டீ தூளால் பசியின்மை, செரிமானக் கோளாறுகள் உள்ளிட்ட வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்படுகின்றன.
   எனவே, சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, கலப்பட டீ தூள் விற்பனையை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT