விருதுநகர்

சாத்தூர் மயானத்தை  நவீனப்படுத்தக் கோரிக்கை

DIN

சாத்தூர் மயானத்தை நவீனப்படுத்த நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வைப்பாற்று ரயில்வே பாலம் அருகே உள்ள மயானத்தை அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த மயானத்தில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வில்லை என்பதுடன், மயானத்துக்கு செல்லும் சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
மயான பகுதியில் ஜாதி வாரியாக சடலங்களை எரிக்க நகராட்சி சார்பில் தகர செட் மற்றும் குளிக்க தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டும் அவை முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன. எனவே இந்த மயானத்தில் நவீன முறையில் மின்மயானம் அல்லது எரிவாயு தகன மேடை அமைத்து முழுமையான அடிப்படை வசதிகள் செய்து தர நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 மேலும் சாத்தூர் நகராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகளை மயானம் அருகில் உள்ள குப்பை கிடங்கிற்குள் கொட்டாமல், மயான சாலையிலோ அல்லது சாலையோரத்திலோ கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். அத்துடன் சில நேரங்களில் அந்த குப்பைகளை தீ வைத்து எரிப்பதையும் நகராட்சி அதிகாரிகள், தடுத்து சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT